கரூர் பஸ் நிலைய கடைகளில் தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல்

கரூர்,
கரூர் பஸ் நிலையத்தில் உள்ள கடைகளில் விற்பனைக்கு வைக்கப் பட்டு இருந்த தடை செய்யப்பட்ட பொருட்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஆய்வு
கரூர் மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறை அலுவலர் டாக்டர் சுரேஷ்பாபு தலை மையில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் நேற்று கரூர் பஸ் நிலையத்தில் உள்ள கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அரசு தடை செய்யப்பட்டு உள்ள பான்பராக், குட்கா போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.
அதே போன்று விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்த காலாவதியான உணவு பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
எச்சரிக்கை
இது குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கூறியதாவது:-
கரூர் பஸ் நிலையத்தில் உள்ள பெரும்பாலான கடை களில் அரசு தடை செய்யப் பட்டு உள்ள பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் வந்தது. அதன்பேரில் ஆய்வு செய்யப்பட்டது. இதில் தடை செய்யப்பட்ட ஏராள மான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட கடை உரிமை யாளர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. தொடர்ந்து இது போன்று விற்பனை செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்

No comments:

Post a Comment