சேலம்: உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் இடமாற்றத்துக்கு இடைக்கால தடை-மாலைமலர் செய்தி

சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி அனுராதா கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆத்தூர் பகுதியில் உள்ள ஒரு சேசோ ஆலையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஜவ்வரிசியில் ரசாயன பவுடர் கலந்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அதன் உரிமையாளர் அனுராதாவை ஆபாசமாக பேசி மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அனுராதா கலெக்டர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். மேலும் ஆத்தூர் போலீசிலும் புகார் செய்தார். போலீசார் சம்பந்தப்பட்ட சேகோ ஆலை உரிமையாளர் மீது வழக்குப்பதிவும் செய்தனர்.
இந்த நிலையில் உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி அனுராதா திடீரென நாமக்கல் மாவட்டம் குருசாமிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
இதையடுத்து அனுராதா சென்னை ஐகோர்ட்டில் இடமாறுதலுக்கு தடை உத்தரவு பெற்றார். உத்தரவில் நீதிபதி, 15 நாட்களுக்குள் அதிகாரி அனுராதா இடமாற்றத்திற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும் என்று உணவு பாதுகாப்பு துறை ஆணையருக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து அதிகாரி அனுராதா இன்று வழக்கம் போல் அலுவலகத்துக்கு வந்து பணியாற்றினார்.

No comments:

Post a Comment