விலை பட்டியல் இல்லை பழநி ஓட்டல்களில் இஷ்டம்போல் வசூல்

பழநி, டிச. 26:
                                                                                        பழநியிலுள்ள ஓட்டல்களில் விலை பட்டியல் இல்லாததால் இஷ்டம்போல் பணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
ஐயப்ப பக்தர்கள் சீசன் துவங்கியதை தொடர்ந்து பழநி நகருக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இதனால், பழநி நகரம் பக்தர்கள் கூட்டத்தால் நிர ம்பி வழிகிறது. இவர்களி டம் விற்பனை செய்வதற் காக அடிவாரம் பகுதி யில் ஏராளமான அளவில் பொ ம்மை கடைகள் மற் றும் தற்காலிக உணவகங் கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ஆனால், இதுபோன்ற கடைகளில் தற்போது விலை பட்டியல் வைக்கப்படுவதில்லை. இதனால் வழக்கமாக ரூ.7க்கு விற்பனை செய்யப்படும் டீ, காபி போன்றவை தற்போது ரூ.10க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ரூ.8க்கு விற்பனை செய்யப்படும் புரோட்டா தற்போது ரூ.15க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரூ.50க்கு விற்பனை செய்யப்படும் அளவு சாப்பாடு தற்போது ரூ.85க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், தற்காலிக உணவகங்களுக்கு வரும் பக்தர்களுக்கு வழங்கப்படும் உணவுப்பொருட்கள் பிளாஸ்டிக் தட்டுக்களில் பிளாஸ்டிக் பேப்பர் வைத்து வழங்கப்படுகிறது.
இஷ்டம் போல் பணம் வசூலிக்கப்படுவதால் உணவகங்களில் விலை பட்டியல் வைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பழநி உணவு கட்டுப்பாட்டு அலுவலர் மோகனரங்கத்திடம் கேட்டபோது, ‘உணவகங்களில் விலை பட்டியல் வைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். உணவு பொருட்களின் தரம் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுதவிர, பான்மசாலா பொருட்களின் விற்பனையை தடுக்கவும், மீறுபவர்கள் மீது அபராதம் விதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்என்றார்.

No comments:

Post a Comment