உணவு பாதுகாப்பு அதிகாரி என மிரட்டி பணம் கேட்டவர் கைது

திருவனந்தபுரம் அருகேயுள்ள போத்தன்கோடு பகுதியை சேர்ந்தவர் ஷாஜகான். இவ ரது மனைவி ஜீனத். இவர்கள் அப்பகுதியில் சப்பாத்தி தயாரிக்கும் சிறிய நிறுவனம் நடத்தி ஓட்டல்களுக்கு சப்ளை செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் இந்த நிறுவனத்துக்கு வந்த ஒரு நபர் தான் உணவு பாதுகாப்பு அதிகாரி எனக் கூறி சப்பாத்தி தயாரிக்க லைசென்ஸ் உள் ளதா? என கேட்டுள்ளார்.
பின்னர் லைசென்சை காட்டவிட்டாலும் பரவாயில்லை தனக்கு ரூ.2 ஆயிரம் லஞ்சம் தந்தால் போதும் என கூறியுள்ளார். இதுகுறித்து ஷாஜகான் திருவனந்தபுரத்தில் உள்ள உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் கூறினார். ஆனால் அதிகாரிகள் தங்கள் அலுவலகத்தில் இருந்து யாரையும் அனுப்பி வைக்கவில்லை என கூறினர். எனவே ஷாஜ கான் போத்தங்கோடு போலீ சில் புகார் செய்தார். போலீ சார் அந்த நபரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணை யில் திருவனந்தபுரம், கொல் லம், ஆலப்புழா பகுதியில் இவ்வாறு பலரிடம் அந்த நபர் உணவுத்துறை அதிகாரி என கூறி மோசடி செய்தது தெரியவந்தது. மேலும் அவர் அவர் கொல் லத்தை சேர்ந்த பிரசாத் (63) என்பதும் தெரிய வந்தது. பின்னர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்

No comments:

Post a Comment