கூடலூரில் தனியார் நிறுவன பால் பாக்கெட்டுகள் பறிமுதல்

கூடலூர் ராஜகோபாலபுரம் பகுதியிலுள்ள பால்சொசைட்டியில் கலப்படம் செய்ய வைத்திருந்த தனியார் நிறுவன பால் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கூடலூர் ராஜகோபாலபுரத்தில் வியாபாரிகள், விற்பனையாளர்களால் பால்சொசைட்டி நடத்தப்பட்டு வருகிறது. இதில் தனியார் நிறுவனத்தின் பாக்கெட் பாலை கலந்து விற்பனை செய்வதாக வந்த புகாரையடுத்து நகராட்சி சுகாதார ஆய்வாளர் எடிசன் அற்புதராஜ், நகராட்சிப் பணியாளர்கள் சனிக்கிழமை அங்கு திடீர் சோதனை நடத்தினர். அப்போது பாலில் கலந்து விற்பனை செய்ய வைத்திருந்து தனியார் நிறுவனத்தின் பால் பாக்கெட்டுகள் சுமார் 60 லிட்டர் இருந்ததை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திருமண வீட்டிற்கு கொடுப்பதற்காக வைத்திருந்ததாக பால்சொசைட்டி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து, உணவுப் பாதுகாப்பு அலுவலர் சிவராஜிடம் கேட்டபோது, "பாக்கெட்பால் கலப்படம் செய்வதாக வந்த தகவலையடுத்து சொசைட்டியிலுள்ள பால் ஆய்வு செய்து சோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளது. பரிசோதனைக்குப் பின் கலப்படம் நிரூபிக்கப்பட்டால் முறைப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

No comments:

Post a Comment