பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வுக் கூட்டம்

தேசிய நுகர்வோர் தினத்தையொட்டி திருவள்ளூரில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களுக்கு அக்மார்க் முத்திரையிட்ட பொருள்கள் வாங்கும் அவசியம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
துணை வேளாண் விற்பனை மற்றும் ஆய்வு இயக்குநரகம் சார்பில் திருவள்ளூரில் உள்ள தனியார் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.  கல்லூரியின் நிறுவன தலைவர் வெங்கட்ராஜ் தலைமை வகித்தார்.
மாவட்ட நுகர்வோர் தகவல் மைய ஒருங்கிணைப்பாளர் சடகோபன் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக துணை ஆட்சியர் அமர்குஷாவ், வேளாண் விற்பனை ஆலோசகர் மனோஜ்குமார், மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயராமன் ஆகியோர் பங்கேற்று சிறப்புரை ஆற்றினர்.
அதில், அக்மார்க் என்பது இந்திய அரசு வழங்கும் தரச் சான்று முத்திரை. அக்மார்க் தயாரிப்புகள் அனைத்தும் கலப்படமில்லாதவை. அக்மார்க் தயாரிப்புகள் தரம் குறைந்தவையாக இருந்தால் பணம் பெறாமல் மாற்றித் தருவதற்கு விதிகளில் இடமுண்டு.
ஒவ்வொரு பாக்கெட் மீதும் தயாரிப்பு மற்றும் காலாவதியாகும் தேதி, நிகர எடை, தயாரிப்பாளர்களின் பெயர், முகவரி ஆகிய தகவல்கள் அச்சிடப்பட்டிருக்கும். அவைகளை பார்த்து வாங்க வேண்டும்.
நுகர்வோர் வாங்கும் அனைத்து பொருள்களுக்கும் கடைகளில் அதற்கான பில்லை கேட்டு வாங்க வேண்டும் என அக்மார்க் முத்திரைகள் குறித்து பல்வேறு விதிமுறைகளை விளக்கிக் கூறினர்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு முற்போக்கு நுகர்வோர் மைய தலைவர் சுகந்தி, மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் செந்தில் முருகன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். முதுநிலை விற்பனையாளர் ஹரிபிரசாத் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment