ஜவ்வரிசியில், மக்காச்சோளம் கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் அரசுக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை

சேலம், ஏப்.14-ஜவ்வரிசியில், மக்காச்சோளம் கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அரசுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.இது குறித்து சேலம் மாவட்ட கலெக்டருக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் மாவட்ட செயலாளர் எஸ்.பி.தங்கவேல் அனுப்பி உள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-மரவள்ளி கிழங்கு சாகுபடிதமிழகம் முழுவதும் சுமார் 20 மாவட்டங்களில் மரவள்ளி கிழங்கு சாகுபடியில் 3 லட்சம் குடும்பங்கள் ஈடுபட்டு வருகின்றன. இது ஏழை, எளிய விவசாயிகளின் ஒரே பணப்பயிர் சாகுபடியாகும். இது இன்று கடுமையான நெருக்கடியில் உள்ளது. கடந்த 3 மாதமாக தமிழ்நாடு மரவள்ளி கிழங்கு விவசாயிகள் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளார்கள். மக்காச்சோளம் கலப்படம், ஆந்திராவில் இருந்து மரவள்ளி கிழங்கு இறக்குமதி இவைகள் மரவள்ளி விவசாயிகளை அழிளின் விளிம்புக்கு தள்ளி வருகிறது.ஒரு நாளைக்கு 50 டாரஸ் லாரி மூலம் ஆயிரம் டன் கிழங்கு இறக்குமதி ஆகி வருகிறது. கடந்த 3 மாதத்தில் 90 ஆயிரம் டன் கிழங்கு இறக்குமதி ஆகிஉள்ளது. இது இப்படியே தொடர்ந்தால் தமிழ்நாடு மரவள்ளி விவசாயமே அழிந்துவிடும்.பாதிப்புஇன்னொரு பக்கம் ஜவ்வரிசி உற்பத்தியும், ஸ்டார்ச் மாவு உற்பத்தியும் வெகுவாக பாதிக்கப்பட்டு இதை நம்பி இருக்கும் 400-க்கும் மேற்பட்ட உற்பத்தியாளர்களும், அவர்களின் குடும்பங்களும், இது தொடர்புடைய விவசாய தொழிலாளர்களும் லட்சக்கணக்கில் பாதிக்கப்படுவார்கள். தற்போது மக்காச்சோளம் கலப்படத்தால் ஒவ்வொரு ஜவ்வரிசி உற்பத்தியாளர்களும் பெரும் இழப்பை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். மேலும் ஜவ்வரிசியில் மக்காச்சோளம் கலப்படம் செய்யப்படுவது தெரிய வந்தால் அதன் விற்பனை கூட வட இந்தியாவில் வெகுவாக குறைந்து விடும். நடவடிக்கை எடுக்க வேண்டும்எனவே சேலம் சேகோவுக்கு வரும் ஜவ்வரிசி உள்ளிட்ட அனைத்து ஜவ்வரிகளையும் பரிசோதனை செய்து கலப்படம் செய்வோரை கைது செய்ய வேண்டும். விவசாயி, சேகோ உற்பத்தியாளர், அதிகாரிகள் உள்ளிட்ட கண்காணிப்பு குழுவை அமைத்து அதன் மூலம் சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும். மரவள்ளி இறக்குமதியை தடுத்து நிறுத்திட வேண்டும்.நாமக்கல்லில் மரவள்ளியில் மக்காச்சோளம் கலப்படம் செய்த ஆலை மீது நடவடிக்கை எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது ஆகும். அதைப்போல சேலம் மாவட்ட நிர்வாகமும், உணவு பாதுகாப்பு அதிகாரிகளும் இந்த விஷயத்தில் தலையிட்டு மரவள்ளியில் மக்காச்சோளம் கலப்படத்தை தடுத்து நிறுத்தி மரவள்ளி விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இதில் தமிழக அரசும் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.



60 கிலோ குட்கா பறிமுதல்

அண்ணாநகர், ஏப். 12:
கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள கடைகளில் நேற்று காலை, உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் லட்சுமி நாராயணன் தலைமையில், அலுவலர்கள் சோதனை நடத்தினர்.
அப்போது, விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 60 கிலோ எடையுள்ள பான்பராக், ஹான்ஸ் உள்ளிட்ட குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மீண்டும் கடைகளில் குட்கா விற்பனை செய்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடைக்காரர்களுக்கு, அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நாமக்கல் அருகே ஜவ்வரிசி தயாரிப்பில் கலப்படம்; தொழிற்சாலைக்கு சீல்

நாமக்கல், ஏப். 11:

நாமக்கல் அருகே லைசென்ஸ் இல்லா மல் இயங்கி வந்த ஜவ்வரிசி தொழிற்சாலைக்கு சீல் வைத்தனர். மரவள்ளிக் கிழங்கு மாவுடன் கலப்படம் செய்ய வைதிருந்த மக்காச் சோள மாவையும் கைப்பற்றி ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர்.
நாமக்கல்லை அடுத்த அலங்காநத்தம் பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் மரவள்ளி கிழங்கு மாவுடன் மக்காசோள மாவை கலப்படம் செய்து ஜவ்வரிசி தயாரிப்பதாக உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்களுக்கு தகவல் கிடைத்தது. மேலும், 320 மூட்டை மக்காசோள மாவு லாரியில் கொண்டு வந்திருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து நேற்று முன் தினம் இரவு நாமக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தமிழ்செல்வன் தலைமையிலான அலுவலர்கள் அந்த தொழிற்சாலைக்கு சென்று திடீர் ஆய்வு செய்தனர்.
அப்போது அங்கு மூட்டைகளில் வைக்கப்பட்டிருந்த கலப்படம் செய்ய மா வை சோதனை செய்தனர். ஏற்கனவே அந்த தொழிற்சா லை லைசென்சு இல்லாமல் இயங்கி வந்ததால் அதை நடத்தி வந்தவருக்கு நோட் டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.
தற்போது சாலையூரை சேர்ந்த செல்வராஜ் என்பவர் லீசுக்கு எடுத்து தொழிற்சாலை நடத்தி வருவதாக தெரியவந்துள்ளது. தொழிற்சாலையில் வைக்கப்பட்டிருந்த மாவு பரிசோதனைக்கு எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. கலப்படம் உள்ளதா என்பது பரிசோதனையின் முடிவில் தெரியவரும் என உணவு பாதுகாப்பு நியமன அலு வலர் தமிழ்செல்வன் தெரிவித்தார். அதை தொடர்ந்து, நேற்றுகாலை அந்த தொழிற்சாலைக்கு அதிகாரிகள் சீல்வைத்தனர்.