உணவு பாதுகாப்பு பயிற்சி முகாம்

திருமயம், : திருமயத்தில் ஒன்றிய சத்துணவு அமைப்பாளர்கள் மற்றும் சமையளர்களுக்கான  உணவு பாதுகாப்பு பயிற்சி முகாம் நடந்தது. திருமயம் ஒன்றியத்திற்குட்பட்ட தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி, சத்துணவு அமைப்பாளர்கள், சமையளர்கள் , உதவியாளர்களுக்கு ஒன்றிய அலுவலகத்தில் நடந்த இப்பயிற்சிக்கு ஆணையர் விஸ்வநாதன் தலைமை வகித்தார். சத்துணவு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆயிஷாராணி, திருமயம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துராமலிங் கம், அறந்தாங்கி வட்டார உணவு பாதுகாப்பு அலு வலர் ஜேம்ஸ்,  சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட  செயலாளர் மதியழகன் ஆகியோர் உணவு வகைகள்   குறித்து பயிற்சி அளித்தனர்.  சத்துணவு ஊழியர் சங்க ஒன்றிய செய லாளர் வெள்ளைச்சாமி வரவேற்றார். பொருளாளர் பழனியப்பன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment