திருச்செங்கோட்டில் தேசிய நுகர்வோர் தின விழிப்புணர்வு பேரணி

தேசிய நுகர்வோர் தினத்தை ஒட்டி திருச்செங்கோட்டில் உணவு பாதுகாப்பு துறை, மாவட்ட வழங்கல் துறை, நுகர்வோர் அமைப்புகள் சார்பாக உணவு பாதுகாப்புச் சட்டம் குறித்தும், உணவு பாதுகாப்பு குறித்தும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருச்செங்கோ
டு விவேகானந்தா மகளிர் கல்லூரியைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. திருச்செங்கோடு மலை அடிவாரம் பகுதியிலிருந்து தொடங்கிய பேரணி திருச்செங்கோடு தெற்கு ரதவீதி, மேற்கு ரதவீதி, பழைய பேருந்து நிலையம், கிழக்கு ரதவீதி வழியாக மீண்டும் மலையடி வாரம் பகுதியில் முடிவடைந்தது, இந்த பேரணியின் பொழுது உணவு பாதுகாப்புச் சட்டத்தின் அவசியம், காலாவதியான உணவுகளை கண்டறிந்து ஒதுக்குதல், பொருட்கள் வாங்கும் பொழுது பில் வாங்குவதன் அவசியம், நுகர்வோரின் உரிமைகள், தூய்மான உணவு பெறுவது உள்ளிட்ட பல்வேறு நுகர்வோர் உரிமை தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
முன்னதாக பேரணியை மாவட்ட வழங்கல் அலுவலர் ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தார் நிகழ்ச்சியில் உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர், விவேகானந்தா மகளிர் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் சந்திரகலா, திருச்செங்கோடு வட்ட வழங்கல் அலுவலர் பிரகாசம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment