"முட்டை: காலாவதி தேதி அச்சிட வேண்டும்’-தினமணி செய்தி

கடைகளில் விற்கப்படும் கோழிமுட்டைகள் அனைத்திலும் அவற்றின் காலாவதி தேதியை அச்சிட வேண்டும் என நுகர்வோர் அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.
உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் கோபாலகிருஷ்ணன் தலைமையில், உணவுப் பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம், சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த தன்னார்வ நுகர்வோர் அமைப்பினர் இதில் பங்கேற்றனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து, தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பின் பொதுச் செயலர் நிஜாமுதீன் கூறியதாவது:
டீக்கடைகள், கடற்கரைகள், சுற்றுலா தலங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் விற்கப்படும் எண்ணெய் பதார்த்தங்களின் தரத்தை தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும்.
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் கோழி முட்டைகளில் உள்ளதைப் போல, உள்ளூர் கடைகளில் விற்கப்படும் முட்டைகளிலும் காலாவதி தேதியை குறிப்பிட வேண்டும். காலியாக உள்ள உணவுப் பாதுகாப்பு ஆய்வாளர் பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர் என்றார் அவர்.

No comments:

Post a Comment