மெல்லக் கொல்லும் 'மினரல் ஆயில்!' தேங்காய் எண்ணெய்யில் தேங்காய் 'மிஸ்சிங்' இப்படியும் நடக்குது பகீர் கலப்படம்



மதுரை, ஜன. 20:
தமிழகத்தில் தற்போது பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் சில கம்பெனி தேங்காய் எண்ணெய், தேங்காயில் இருந்து தயாரிக்கப்பட்டதில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
தேங்காய் எண்ணெய் என்றாலே அதற்கு முழுமை யான மூலப்பொருள் தேங்காய்தான். பருத்த தேங்காய் களை உடைத்து, காயவிட்டு செக்கில் ஆட்டி எடுத்து எண்ணெய் பெறப்படுகிறது. தலை முடிக்கு தேய்ப்பது மட்டுமல் லாது, சித்தா உள்ளிட்ட பலதரப்பட்ட மருந்துகள் தயாரிப்பிலும், உணவிலும் தேங்காய் எண்ணெய் அதிகம் பயனாகிறது.
ஆனால் சமீப காலமாக பெரும்பாலான கடைகளில் விற்கும் தேங்காய் எண்ணெய், தேங்காய் எண்ணெயே இல்லை. பல கம்பெனிகள் தேங்காய் எண்ணெய்யை, பெட்ரோல் கழிவானமினரல் ஆயிலில்இருந்து தயாரித்து விற்று வரும் அதிர்ச்சித் தகவல் வெளிவந்துள்ளது. பொதுவாக கச்சா எண்ணெயை சுத்திகரித்தே பெட்ரோல், டீசல், கெரசின், நாப்தலீன், மெழுகு துவங்கி ரோட்டுக்கான தார் வரை 24 வகைப் பொருட்கள் பெறப்படுகின்றன. இதில் கிடைப்பதேமினரல் ஆயில்’. இதனைஅமெரிக்க மண்ணெண்ணெய்அல்லதுலிக்யூட் பேரபின்என்கின்றனர்.
நிறம், மணமற்ற, அடர்த்திமிக்க இந்த மினரல் ஆயிலுடன் தேங்காய் வாசத்திற்கான எசன்ஸ் கலந்து தயாரித்து தேங்காய் எண்ணெய் என்ற பெயரில் விற்பனைக்கு வருகிறது. இந்த மினரல் ஆயிலுடன் எந்த எண்ணெயையும் கலப்படம் செய்தும் விற்க முடிவதால் சிலர் சிறிதளவு தேங்காய் எண்ணெய்யுடன், மினரல் ஆயிலை பெருமளவில் கலந்து விற்பதும் நடக்கிறது.
இந்த எண்ணெயை தலைக்குத் தேய்ப்பது உள்ளிட்ட வெளிப்பயன்பாட்டிற்கு பயன்படுத்துவது ஒருபுறமிருக்க, நம் தென்மாவட்டத்தின் பலரது வீடுகளில் உணவு தயாரிப்பில் அதிகளவில் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. தேங்காய் சாதம், முறுக்கு, பலகாரங்களுடன் தாளிப்பதற்கும் பயன்படுத்துகின்றனர். பாக்கெட்டில் அடைத்து விற்கும் இந்த மினரல் ஆயிலை அறியாமையில் பலரும் சமையலுக்கும் பயன்படுத்தி வருகின்றனர். தேங்காய் எண்ணெய்யில் மட்டுமல்லாது நாம் பயன்படுத்தும் பலதரப்பட்ட ஹேர் ஆயில்கள், சோப்புகள், முக லோஷன்களிலும்மினரல் ஆயில்அரக்கன் இருக்கிறான்.
இந்த எண்ணெயை தலைக்குத் தேய்ப்பது உள்ளிட்ட வெளிப்பயன்பாட்டிற்கு பயன்படுத்துவது ஒருபுறமிருக்க, நம் தென்மாவட்டத்தின் பலரது வீடுகளில் உணவு தயாரிப்பில் அதிகளவில் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. தேங்காய் சாதம், முறுக்கு, பலகாரங்களுடன் தாளிப்பதற்கும் பயன்படுத்துகின்றனர். பாக்கெட்டில் அடைத்து விற்கும் இந்த மினரல் ஆயிலை அறியாமையில் பலரும் சமையலுக்கும் பயன்படுத்தி வருகின்றனர். தேங்காய் எண்ணெய்யில் மட்டுமல்லாது நாம் பயன்படுத்தும் பலதரப்பட்ட ஹேர் ஆயில்கள், சோப்புகள், முக லோஷன்களிலும்மினரல் ஆயில்அரக்கன் இருக்கிறான்.
மினரல் ஆயிலில் உருவாகும் தேங்காய் எண்ணெயை தலைக்கு தடவினால் தோல் வறண்டு போகும். தலைமுடி தன் ஜீவனை இழக்கும். பலருக்கும் ஒவ்வாமையில் முடி கொட்டும். சீக்கிரமே நரைத்துப் போகும். அரிப்பு வரும், குழந்தைகளுக்கு பயன்படுத்துவது மேலும் ஆபத்தானது. இந்த மினரல் தேங்காய் எண்ணெய்யை உணவுக்குப் பயன்படுத்துவது இன்னும் கொடுமையானது என்று டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.
இதுகுறித்து தமிழக அரசு டாக்டர்கள் சங்கத்தலைவர் செந்தில் கூறுகையில், ‘இந்த கலப்பட தேங்காய் எண்ணெய் உட்கொள்ளும்போது வைட்டமின் சத்துக்களைக் குறைத்து, செறித்தல் உறுப்புகளைப் பாதித்து, மெல்லக் கொல்லும் விஷமாகிறது. செக்குகளில் ஆட்டியெடுத்து வந்து, கடைகளில் விற்பனையாகும் தேங்காய் எண்ணெய்தானா என்பதை பொதுமக்கள் கவனித்துப் பார்த்து வாங்கி, உணவுத் தேவைக்கு பயன்படுத்துவது அவசியம்என்றார்.
உணவு கலப்படத் தடுப்பு உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ‘வெளிப்பயன்பாடு கருதி மினரல் ஆயில் கலந்த பொருட்கள் விற்பனைக்கு வந்து விடுகிறது. பாட்டில்களில் அடைத்து வரும் எண்ணெய் உணவுக் கானதுதானா என்பதை அதில் அச்சிட்டிருக் கும் பொருட்கள் பட்டியலைச் சரிபார்த்த பிறகே பயன்படுத்துவது அவசியம். தயாரிப்பு நிறுவனங்கள் மீதான எங்கள் கண்காணிப்பு ஒருபுறமிருக்க, மக்கள் விழிப்புணர்வும் இதில் முக்கியம்என்றார்.

No comments:

Post a Comment