தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா பறிமுதல்

ரெட்டியார்சத்திரம்:
தடைசெய்யப்பட்ட 400 கிலோ பான்மசாலா, குட்கா, புகையிலைப் பொருட்களை, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் குழுவினர், ரெட்டியார்சத்திரத்தில் பறிமுதல் செய்துள்ளனர்.
மனித உயிர்களுக்குத் தீங்கு விளைவிக்கும், பான்மசாலா, குட்கா போன்ற புகையிலை தயாரிப்புகளுக்கு, மாநில அரசு தடை விதித்துள்ளது. இருப்பினும், மொத்த வியாபாரிகள் பண்டல், பண்டல்களாக இருப்பு வைத்து, விற்பனையைத் தொடர்கின்றனர்.
தடை செய்யப்பட்டுள்ளதால், நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட, கூடுதல் விலைக்கு விற்கின்றனர். இதையடுத்து, இவற்றின் விலை மூன்று மடங்கு அதிகமாக நிர்ணயித்து, சில்லறை விற்பனை நடக்கிறது.
மாவட்ட உணவுப்பொருள் பாதுகாப்பு அதிகாரி குணசேகரன் தலைமையிலான குழுவினர், இரு நாட்களாக ஆய்வுப் பணியை மேற்கொண்டுள்ளனர்.
நேற்று, ரெட்டியார்சத்திரத்தில் உள்ள ஒரு கடையில், 480 கிலோ எடையுள்ள பான்மசாலா, குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
வட்டார அதிகாரிகள் பாண்டி, ரமேஷ், பாண்டியராஜன், ராஜா ஆகியோர் தொடர்ந்து கிராமப்புற கடைகளில் ஆய்வுநடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment