வணிகர்களை துன்புறுத்தும் அதிகாரிகள் மீது நடவடிக்கை வணிகர்கள் சங்கம் தீர்மானம்

சென்னை, ஜன. 22:
வணிகர்களை துன்புறுத்தும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மீது தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப் பின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் சென்னை சர்.பிடி தியாகராயர் அரங்கத்தில் நேற்று மாலை நடந்தது. இதில், மாநில தலைவர் .ஏம். விக்ரமராஜா தலைமை தாங்கினார். மண்டல தலைவர்கள் சதக் அப்துல்லா, ஆம்பூர் கிருஷ்ணன், பொன்னேரி ஜெயபால் மற்றும் சென்னை மாவட்ட தலைவர்கள் ஜோதிலிங்கம், மாரித்தங்கம், பாண்டியராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சிறப்பு அழைப் பாளராக அகில இந்திய வணிகர்கள் சம்மேளனத்தின் தேசிய தலைவர் பி.சி பார்டியா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்த கூட்டத்தில், கூடுதல் செயலர் வி.பி. மணி, மாநில பொருளாளர் கோவிந்தராஜீலு மற்றும் தமிழகம் முழுவதும் இருந்து மாவட்ட, மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து விக்ரமராஜா பேசினார்.
உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தில் மிரட்டும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வணிகர்களை துன்புறுத்தும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மீது தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவையில் மே. 5ம் தேதி 31வது வணிகர் தின மாநில மாநாடு நடைபெறுகிறது. இதில், 5 லட்சம் வணிகர்களை பங்கு கொள்ள செய்வது, அன்றைய தினம் தமிழக முழுவதும் கடைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்பது உள்பட தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன.
இதை தொடர்ந்து தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பின் மாதம் இருமுறை வெளி வரும் இதழ் வெளியிட்டு விழா நடந்தது. இதில், சென்னை உயர்நீதி மன்ற லோக் அதாலத் நீதிபதி டி.என் வள்ளிநாயகம் இதழை வெளியிட்டார். வி.ஜி சந்தோஷம், ரமேஷ் போத்தி இதழை பெற்றுக்கொண்டனர்.

No comments:

Post a Comment