உணவுப் பொருள்களில் தயாரிப்பு விவரம்: ஆட்சியர் எச்சரிக்கை

உணவுப் பொருள்களின் தயாரிப்பு தேதி, காலாவதியாகும் தேதி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அச்சடிக்கப்பட்ட லேபிள்களுடன் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் வே.ராஜாராமன் எச்சரித்துள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

    சிவகங்கை மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின் கீழ், சிவகங்கை நகர் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சிவகங்கை வட்டம் மற்றும் நகரில் உள்ள மளிகை கடையில் உணவு மாதிரி (பாசிபருப்பு பொட்டலம்) எடுத்து பரிசோதனைக்கு அனுப்பியதில், உணவு பாதுகாப்பு தரச் சட்ட விதிகளின்படி லேபிள் விவரங்கள் குறிப்பிடப்படாமல் இருந்தது தெரிய வந்தது.
  இதுகுறித்த ஆய்வறிக்கையின் கீழ் பிரபல கடையின் உரிமையாளர் மீது மாவட்ட நிர்வாக நடுவர் மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதைத் தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் கூடுதல் மாவட்ட நிர்வாக நடுவர் சோ.தனபால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்துள்ளார்.
எனவே உணவு தொழில் புரிபவர்கள் சட்டவிதிகளைப் பின்பற்றி நடந்திட வேண்டும் என ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில்  அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment