குமரி உணவகங்களில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு

கன்னியாகுமரியில் உள்ள சாலையோர உணவகங்களில் தரமற்ற உணவுகள் தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் புதன்கிழமை இரவு உணவகங்களில் திடீர் ஆய்வு செய்தனர்.
சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் ஐயப்ப பக்தர்கள் சீசனையொட்டி ஏராளமான சாலையோர உணவகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த உணவகங்களில் தரமற்ற உணவுப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நாகர்கோவில் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சாலோடீசன் தலைமையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஐயப்பன், சிதம்பரதாணுபிள்ளை, அஜய்குமார், முகைதீன்பிச்சை, பாலன் ஆகியோர் சாலையோர உணவகங்களில் திடீர் ஆய்வு நடத்தினர். ஆய்வின் போது தரமற்ற உணவுகள், அழுகிய காய்கனிகள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. மேலும் கடைகளுக்கான உரிமம் 2013 டிசம்பர் 4-ம் தேதியுடன் நிறைவடைகிறது. 2014 பிப்ரவரி மாதத்துக்குள் உரிமங்கள் புதுப்பிக்கப்பட வேண்டும். தவறும் பட்சத்தில் அபராதம் விதிக்கப்படும். உணவகங்களில் தயாரிக்கப்படும் உணவுகளை திறந்த வெளியில் வைக்காமல் கண்ணாடி கூண்டு அமைத்து பாதுகாப்பாக வைத்து சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்க வேண்டும் எனவும் கடை உரிமையாளர்களுக்கு  அறிவுறுத்தப்பட்டது.

No comments:

Post a Comment