உணவு பொருளில் கலப்படம் சோதனை நடத்த முடிவு

திண்டுக்கல் :
வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக உணவு பொருட்களில் கலப்படம் செய்வதை கண்டுபிடிக்க அனைத்து கடைகளிலும் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில், உணவு பொருட்களை தள்ளுவண்டிகளில் விற்பனை செய்வது சமீபகாலமாக அதிகரித்துள்ளது. மட்டன் சூப்பிலிருந்து சில்லி சிக்கன் உட்பட அசைவ உணவுகள் தாராளமாக விற்கப்படு கின்றன.மருத்துவமனை களின் அருகில் இட்லி, தோசை, புட்டு கடைகள் அதிக அளவில் செயல்படுகின்றன.
வாடிக்கையாளர்களை ஈர்க்க வேண்டுமென்பதற்காக தடை செய்யப்பட்ட கலர்களை இனிப்பு பதார்த்தங்கள், அசைவ உணவுகளை பொறித்தெடுப்பதில் பயன்படுத்துகின்றனர். நீண்டநாள் கெடாமல் இருக்க வேண்டுமென்பதற்காக பாதுகாப்பற்ற கெமிக்கல்களின் பயன்பாடும் அதிகரித்துள்ளது.
இவற்றை தடை செய்ய வேண்டுமென்பதற்காக மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள், தற்போது களமிறங்கியுள்ளனர். தள்ளுவண்டிகள் உட்பட இனிப்பு பதார்த்தங்கள் விற்கப்படும் அனைத்து கடைகளிலும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அச்சிடப்பட்ட உணவு பாதுகாப்பு தொடர்பான வாசகங்கள் அடங்கிய நோட்டீஸ்களை வினியோகித்துள்ளனர்.
உணவு பாதுகாப்பு துறையின் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் குணசேகரன் கூறுகையில்,”"குழந்தைகளுக்கான உணவு பொருட்களிலும் கலப்பட பொருட்கள் சேர்க்கப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. களப் பணியாளர்கள் துணையுடன் அனைத்து கடைகளிலும் சோதனை நடத்த முடிவு செய்துள்ளோம்,” என்றார்.

No comments:

Post a Comment