வேலூரில் இருந்து ஓசூருக்கு மாட்டுத்தீவனத்திற்காக கொண்டு சென்ற காலாவதி பிஸ்கட், நொறுக்குத்தீனி பறிமுதல் வாகன தணிக்கையில் சிக்கியது

கிருஷ்ணகிரி, : கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ராஜேஷ் உத்தரவின்படி, பறக்கும்படை தாசில்தார் ஜெயக்குமார், குடிமைப் பொருள் வழங்கல் தனி தாசில்தார் விஜயராகவன், ஆர்.ஐ.கள் துரைமுருகன், ரூகேஷ், சிலம்பரசன் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் கிருஷ்ணகிரி – பெங்களூர் சாலையில் உள்ள டோல்கேட் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த மினி கண்டெய்னர் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது அந்த லாரி யில் ரூ25 ஆயிரம் மதிப்பலான காலாவதியான பிஸ்கட், குர்குரே உள்ளிட்ட உணவு பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து தனிப்படையினர் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் கலைவாணிக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்த தில், அந்த பொருட்கள் அனைத்தும் காலாவதியானது என்பதை உறுதி செய்தார்.
இதையடுத்து அந்த லாரியின் டிரைவரான வேலூரை சேர்ந்த ஆனந்தன் (40) என்பவரிடம் விசார ணை நடத்தினர். அதிகாரிகளின் முதற்கட்ட விசாரணையில், அந்த பொருட்கள் அனைத் தும் வேலூரில் இருந்து ஓசூருக்கு எடுத்து சென்றதும், அந்த பொருட்களை கொண்டு மாட்டிற்கு தீவனம் தயாரிக்க இருந்ததும் தெரியவந்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் லாரியின் டிரைவரிடம் தொடர்ந்து விசார ணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment