கலப்பட டீத்தூள், காலாவதியான பொருட்கள் பறிமுதல் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை-தினத்தந்தி செய்தி

திருப்புவனம் பகுதி கடைகளில் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான கலப்பட டீத்தூள், காலாவதியான பொருட்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திடீர் ஆய்வு
திருப்புவனம் பகுதியில் உள்ள கடைகளில் கலப்பட பொருட்கள் மற்றும் காலா வதியான பொருட்கள் விற் பனை செய்யப்படுவதாக புகார்கள் வந்தது.இதனை யடுத்து சிவகங்கை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அருண்நம்பி உத்தர வின் பேரில் திருப்புவனம் பேரூராட்சி செயல் அலுவலர் முனியாண்டி, வட்டார உணவு பாதுகாப்பு அலு வலர்கள் முத்துராமலிங்கம் (மானாமதுரை), சுரேஷ் (திருப் பத்தூர்), காளைபாண்டியன், பேரூராட்சி துப்புரவு மேற் பார்வையாளர் சேரலாதன் மற்றும் பணியாளர்கள் கொண்ட குழுவினர் திருப்பு வனம் நகரின் அனைத்து பகுதி களிலும் உள்ள கடைகளில் திடீர் ஆய்வு செய்தனர். ஆய்வின்போது, டீக்கடை களில் கலப்பட டீத்தூள், பெட்டி கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பது கண்ட றியப்பட்டது. அத்துடன் கோழிக் கறிகடைகள், ஆட்டு இறைச்சி கடைகள், ஓட்டல், பேக்கரி ஆகியவற்றில் இருந்து ரூ.10 ஆயிரம் மதிப்பிலான காலாவதியான பொருட்களை பறிமுதல் செய்தனர்.
கடுமையான தண்டனை
மேலும் தடை செய்யப்பட்ட காலாவதியான பொருட்கள், கலப்பட டீத்தூள் பயன்படுத்தி னாலோ அல்லது விற்பனை செய்தாலோ, உணவு பாது காப்பு சட்டம் 2006ன்படி குற்ற நடவடிக்கைக்கு உட்படுத் தப்பட்டு கடுமையான தண் டனை வழங்க நட வடிக்கை எடுக்கப்படும் என்று எச்ச ரிக்கை விடுக்கப்பட்டது.

No comments:

Post a Comment