மாம்பழத்தை பழுக்க வைக்க விவசாயத்துறை யோசனை

மதுரை:
‘மாம்பழங்களை செயற்கை முறையில் பழுக்க வைக்க கூடாது,’ என்கிறது, உணவு பாதுகாப்பு துறை. ‘எதிபான்’ என்ற, வேதிப்பொருள் மூலம், இயற்கை முறையில் பழுக்க வைக்கலாம், என விவசாயத் துறையினர் தெரிவித்தனர்.கடந்தாண்டு ‘கார்பைடு’ கற்கள் மூலம் மாங்காய்கள், பழமாக மாற்றப்பட்டன. இக்கற்களால், தோலின் மேற்புறத்தை மட்டும், மஞ்சள் நிறமாக்கமுடியும். உட்பகுதி காயாக இருப்பதால், சாப்பிடும்போது வயிற்று வலி ஏற்படும்.எனவே கார்பைடு முறையில், பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை, உணவு பாதுகாப்பு அலுவலர்கள், பறிமுதல் செய்து அழித்தனர். தற்போது, மாம்பழங்கள் வரத்து துவங்கி விட்டது.பழங்களை பழுக்க வைக்க, ‘எதிபான்’ வேதிமருந்தை பயன்படுத்தலாம் என, விவசாயத்துறையினர் பரிந்துரைத்துள்ளனர். அந்த மருந்தை, மாங்காய்களுக்கு நடுவில் ஒரு பாத்திரத்தில் வைத்தால், மறுநாள் பழுத்துவிடும். ‘ஸ்பிரே’ முறையில் தெளிக்கக்கூடாது என, தெரிவித்துள்ளனர். செயற்கை முறையில் பழுக்க வைக்க, உணவு பாதுகாப்பு சட்டம் தடை விதிக்கிறது. ஆனால் இந்த முறையில் பழுக்க வைத்த பழங்களை பறிமுதல் செய்வது, தவறு என விவசாயத் துறையினர் தெரிவிக்கின்றனர்.கலெக்டர் தலைமையில் விவசாயத்துறை, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் இணைத்து பேசி, தெளிவுபடுத்தினால் தான், இப்பிரச்னைக்கு தீர்வு காண முடியும்.

No comments:

Post a Comment