மத்திய அரசு உணவு பாதுகாப்பு சட்டத்தை சீரமைக்க வேண்டும் வியாபாரிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம்

நெல்லை,
மத்திய அரசு உணவு பாதுகாப்பு சட்டத்தை சீரமைக்க வேண்டும் என வியாபாரிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆலோசனை கூட்டம்
நெல்லை டவுன் வியாபாரிகள் சங்க ஆலோசனை கூட்டம் நெல்லை டவுனில் உள்ள சங்க அலுவலகத்தில் நேற்று நடந்தது.
கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். பொருளாளர் மீரான் முன்னிலை வகித்தார். பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–
உணவு பாதுகாப்பு சட்டம்
மத்திய அரசு உணவு பாதுகாப்பு தர சட்டத்தை சீரமைக்க வேண்டும். பாராளுமன்ற தேர்தல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கிறது. எனவே வியாபாரிகள், வணிகர்கள் குறைந்த பட்சம் ரூ.50 ஆயிரம் எடுத்து செல்ல தேர்தல் ஆணையம் அனுமதிக்க வேண்டும்.
சங்க கட்டிடம் அமைந்துள்ள பகுதி அருகே மாநகராட்சி சார்பில் பூங்கா அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் அந்த பணி நடைபெறாமல் உள்ளது. மாநகராட்சி நிர்வாகம் பூங்கா அமைக்கும் பணியை தீவிரப்படுத்த வேண்டும்.
இவ்வாறு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், சங்க துணை தலைவர்கள் பெத்துக்கனி, ஸ்டீபன் பிரேம்குமார், துணை பொதுச்செயலாளர்கள் மாணிக்கம், வெங்கட்ராமன், கவுரவ ஆலோசகர் வெங்கடாச்சலம், நிர்வாகிகள் ஆல்பர்ட் செல்வராஜ், தர்மராஜ், சண்முக சுந்தரம், இமானுவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment