ரூ.5.4 லட்சம் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

கோவையில் கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.5.4 லட்சம் மதிப்புள்ள புகையிûலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
 கோவை ராஜ வீதி, தாமஸ் வீதி உள்ளிட்ட பகுதிகளில் மொத்த வியாபாரிகள் சிலர், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை வடமாநிலங்களிலிருந்து இறக்குமதி செய்து பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக புகார் எழுந்தது.
 புகார் தெரிவிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள தனியார் கிடங்குகளில் உணவு பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகள், வெரைட்டிஹால் போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது, காந்தி பூங்கா அருகேயுள்ள லிங்கப்ப செட்டி வீதியை சேர்ந்த அசோக்குமார் (32), தனக்கு சொந்தமான கிடங்கில் "ஹான்ஸ்' புகையிலைப் பொருள்களை 60 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், சில பாக்கெட்டுகளை பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
 பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களின் மதிப்பு ரூ.5.4 லட்சம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
 இது குறித்து அசோக்குமாரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ராஜஸ்தானை சேர்ந்த அசோக்குமார், கோவையில் மிட்டாய் மொத்த வியாபாரம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment