உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் வணிகர்களுக்கு எதிரானது அல்ல–பண்ருட்டியில் நடை பெற்ற உணவு வணிகர்களுக்கான விழிப்புணர்வு கூட்டத்தில் மாவட்ட நியமன அலுவலர் விளக்கம்

கடலூர் மாவட்ட உணவுப்பாதுகாப்பு துறையினர் மற்றும் பண்ருட்டி தாலுகா அனைத்து வியாபார சங்களின் சம்மேளனம் இணைந்து நடத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் தொடர்பான விளக்கக் கூட்டம் 08.03.2014 அன்று மாலை 6.00 மணியளவில் பண்ருட்டி ,காந்தி ரோட்டிலிலுள்ள ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பண்ருட்டி நகரம் மற்றும் தாலுகா பகுதிகளை சார்ந்த 200க்கும் மேற்பட்ட உணவு வணிகர்கள் கலந்து கொண்டனர். உணவு பாதுகாப்பு துறை சார்பில் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் M.P.இராஜா, பண்ருட்டி நகரப்பகுதி உணவுபாதுகாப்பு அலுவலர் செந்தில்ராஜ்குமார்,பண்ருட்டி வட்டாரப்பகுதி உணவுபாதுகாப்பு அலுவலர் நல்லதம்பி, சிதம்பரம் நகரப்பகுதி உணவுபாதுகாப்பு அலுவலர் பத்மநாபன், அண்ணாகிராம வட்டார உணவுபாதுகாப்பு அலுவலர் கந்தசாமி, குறிஞ்சிப்பாடி வட்டார உணவுபாதுகாப்பு அலுவலர் சுப்ரமணியன், கடலுர் நகரப்பகுதி உணவுபாதுகாப்பு அலுவலர் நந்தகுமார், கீரப்பாளையம் வட்டார உணவுபாதுகாப்பு அலுவலர் அருண்மொழி ஆகியோர் கலந்து கொண்டனர். உணவுபாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தின் முக்கியத்துவம் பற்றி மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் M.P.இராஜா அவர்களும்,லேபிளிங் தொடர்பான விளக்கங்களை செந்தில்ராஜ்குமார் அவர்களும், தடை செய்யப்பட்ட மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட உணவுபொருட்கள் தொடர்பான விளக்கங்களை பத்மநாதன் அவர்களும்,உணவுபாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் தொடர்பான விளக்கங்களை நல்லதம்பி  அவர்களும்,உரிமம் மற்றும் பதிவு தொடர்பான விளக்கங்களை கந்தசாமி அவர்களும்,சுகாதார நடைமுறைகள் குறித்து அருண்மொழி அவர்களும் விளக்கினார்கள். பின்பு உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் மற்றும் விதிமுறைகள் தொடர்பாக உணவு பொருள் வணிகர்களின் சந்தேகங்களுக்கு உணவு பாதுகாப்பு துறையினர் விளக்கம் அளித்தனர். இந்த விழிப்புணர்வு கூட்டத்தினை சிறப்பாக ஏற்பாடு செய்த பண்ருட்டி தாலுகா அனைத்து வியாபார சங்களின் சம்மேளனம் செயலர் இராஜந்திரன் அவர்களுக்கும்,மற்றும் சங்க நிர்வாகிகளுக்கும் ,உணவு பாதுகாப்பு துறையினருக்கும் உணவு வணிகர்கள் நன்றி தெரிவித்தனர்.

No comments:

Post a Comment