உணவு பாதுகாப்பு சட்டத்தை நன்கு ஆராய்ந்து எளிமைப்படுத்திய பிறகு, அனைவரின் ஒப்புதலோடு அமல்படுத்த வேண்டும்.

கரூர், பிப்.28–
நெல்லுக்கான செஸ் வரியை ரத்து செய்ய வேண்டும் என்று அரிசி ஆலை உரிமையாளர்கள், நெல்– அரிசி வணிகர்கள் சங்க சம்மேளன கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள், நெல்– அரிசி வணிகர்கள் சங்கங்களின் சம்மேளன பொதுக்குழு கூட்டம் கரூரில் உள்ள ஒரு ஓட்டலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் துளசிங்கம் தலைமை தாங்கினார்.
கரூர் மாவட்ட செயலாளர் வெங்கட்ராமன் வரவேற்று பேசினார். வர்த்தக சங்க தலைவர் ராஜு சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:–
உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி, உரிமம் பெற 6 மாதம் கால நீடிப்பு வழங்கிய பிரதமர் மன்மோகன்சிங், மத்திய சுகாதாரத்துறை மந்திரி குலாம்நபி ஆசாத் ஆகி யோருக்கு நன்றி தெரிவித்து கொள்வது.
மேலும் மத்திய சுகாதாரத்துறை, விரைவில் உணவுத்துறை வணிகர்கள், விவசாயிகள், உற்பத்தியாளர்கள் மற்றும் நீண்ட அனுபவம் பெற்ற சுகாதாரத்துறை அதிகாரி களை கொண்டு ஒரு கமிட்டி ஏற்படுத்த வேண்டும். இந்த கமிட்டி நம் நாட்டிற்கு உகந்தவாறு இந்த உணவு பாதுகாப்பு சட்டத்தை நன்கு ஆராய்ந்து எளிமைப்படுத்திய பிறகு, அனைவரின் ஒப்புதலோடு அமல்படுத்த வேண்டும்.
மத்திய அரசு அரிசிக்கு விதித்த சேவை வரியை, போராடி ரத்து செய்த முதல்– அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து கொள்வது.
அதே போன்று மத்திய நிதித்துறை மந்திரி ப.சிதம்பரத்திற்கு நன்றி தெரிவிப்பது.
நெல்லிற்கான வேளாண்மை செஸ் வரியை ரத்து செய்ய வேண்டும். மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது-.
இந்த கூட்டத்தில் மாநில செயலாளர் மோகன், பொருளாளர் சுப்ரமணி, கரூர் மாவட்ட அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்க செயலாளர் மாயன்பெருமாள், பொருளாளர் ஜெயராமன், கரூர் மாவட்ட நெல் அரிசி மொத்த வியாபாரிகள் சங்க தலைவர் கந்தசாமி, ஆலோசகர் ஆறுமுகம் செட்டியார், பொருளாளர் கண்ணன் உள்பட நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
முடிவில் அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்க தலைவர் தர்மலிங்கம் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment