புகையிலை விதையில் சமையல் எண்ணெய் தயாரிக்க அரசு முயற்சி

வேடசந்தூர்: புகையிலை விதையில் இருந்து, கொழுப்பு இல்லாத, சமையல் எண்ணெய் தயாரிக்கும் முயற்சியை, தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.

திண்டுக்கல், வேடசந்தூரில் புகையிலை ஆராய்ச்சி மையம் உள்ளது. இங்கு, புகையிலை சாகுபடிக்கான விதை, நாற்றுகள் வழங்கப்படுகின்றன. திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களில், 10 ஆயிரம் எக்டேரில் புகையிலை பயிரிடப்பட்டு, மகாராஷ்டிரா மாநிலத்திற்கு அனுப்பப்படுகிறது. புகையிலை பயன்பாடு, தமிழகம் உட்பட, சில மாநிலங்களில் தடை செய்யப்பட்டுள்ளது. இதில் இருந்து, பயன்பாடுமிக்க, மாற்று பொருளை கண்டுபிடிக்க, ஆராய்ச்சி மையத்திற்கு அரசு அறிவுறுத்தியிருந்தது. புகையிலையில், நிகோட்டின், நிகோட்டின் சல்பேட், சொலனிகால், சிட்ரிக் அமிலம், மாலிக் அமிலம், இலை புரதம், புகையிலை விதை எண்ணெய் போன்ற பொருட்கள் உள்ளன. இவற்றில் இருந்து, கொழுப்பு இல்லாத, சமையல் எண்ணெய் தயாரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இது, சூரியகாந்தி எண்ணெய்க்கு ஈடானது. மக்கள் மத்தியில் இதை பிரபலப்படுத்த, அரசு முடிவு செய்துள்ளது. வேடசந்தூர் புகையிலை ஆராய்ச்சி மையம் உள்ளிட்ட பல இடங்களில், இதற்கான ஆராய்ச்சிகள் நடக்கின்றன.இதற்காக, புகையிலை விதையை அதிகளவில் உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, ஆராய்ச்சி மைய வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment