ஒசூரில் ரூ.2 லட்சம் மதிப்பிலான பான்மசாலா, குட்கா பறிமுதல்

ஒசூரில் ரூ.2 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா ஆகியவற்றை மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர்கள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செயதனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் டி.பி.ராஜேஷின் உத்தரவின் பேரில், மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் டி.கலைவாணி தலைமையில் வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் சேகர், துளசிராமன், குணசேகர், சுவாமிநாதன், ராஜசேகர், இளங்கோவன், சி.சுந்தரமூர்த்தி, ஸ்டாலின் , ராஜரத்தினம், ஒசூர் நகராட்சி துப்புரவு ஆய்வாளர்கள் கிரி, சந்திரகுமார், மணி ஆகியோர் அடங்கிய குழுவினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
ஒசூர் நாமால் தெரு, புதிய, பழைய பேருந்து நிலையம், பாகலூர் சாலைப் பகுதிகளில் உள்ள கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான பான்மசாலா, குட்கா ஆகியவற்றை பறிமுதல் செய்து அழித்தனர். இந்தப் பொருள்கள் கைப்பற்றப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை நோட்டீûஸ உடனடியாக வழங்கினர். இதுபோன்ற தடை செய்யப்பட்ட பொருள்களைத் தொடர்ந்து விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும், இதுபோன்ற ஆய்வுகள் மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் தொடரும் எனவும் உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் கலைவாணி எச்சரித்தார்.

No comments:

Post a Comment