கலப்படம் இன்றி ஜவ்வரிசி தயாரிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம்

தருமபுரியில் கலப்படம் இன்றி ஜவ்வரிசி, ஸ்டார்ச் தயாரிப்பது தொடர்பான விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது.
தருமபுரி மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியர் கே.விவேகானந்தன் பேசியது: தரமான ஜவ்வரிசி, ஸ்டார்ச் தயாரிக்க உதவும் வகையில், கிழங்கு தோல் உரிக்கும் இயந்திரம் புதிதாக நிறுவும் நிறுவனங்களுக்கு 50 சத மானியம் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.
மேலும், உற்பத்தி நடைபெறும் மாதங்களான நவம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரையிலான காலக்கட்டத்தில் மாதம் இரண்டு முறை சேகோ மாதிரி எடுத்து சோதனை கூடத்துக்கு அனுப்பி சோதனை
செய்ய வேண்டும் என்றார் அவர்.
கூட்டத்தில், மாவட்டத் தொழில் மைய பொதுமேலாளர் என்.ஜெயபாலன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) எச்.ரஹமத்துல்லாகான், (வேளாண்மை) ஆர்.ஆர்.சுசீலா, தொழில்சாலை நல அலுவலர் ஏ.நாராயணன், தொழில்சாலை ஆய்வாளர் தீபாபாரதி, ஜவ்வரிசி, ஸ்டார்ச் தயாரிக்கும் தொழில்சாலை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment