கலெக்டர் உத்தரவு பள்ளி, கல்லூரி விடுதிகளில் சமையலுக்கு தரமான பொருட்களை பயன்படுத்த வேண்டும்

நாமக்கல், ஜூன் 27:
பள்ளி, கல்லூரிகளின் விடுதிகளில் தரமான பொருட்களை பயன்படுத்தி சமைக்க வேண்டும் என நாமக்கல் கலெக்டர் தட்சிணாமூர்த்தி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தாலுகாவில் உள்ள ஒரு தனியார் கல்லூரி விடுதியில் உணவு சாப்பிட்ட மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, பேதி ஏற்பட்டதை தொடர்ந்து, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அடங்கிய குழு அக்கல்லூரிக்கு சென்று விடுதியின் சமையலறை, சேமிப்பு அறை, உணவு பரிமாறும் இடம், குடிநீர்வசதி, கழி வறை வசதி, கழிவுநீர் மற்றும் குப்பைகளை கையாளும் விதம், உணவு தயாரிப்பில் ஈடுபடும் நபர்களின் தன்சுத்தம், உணவு மூலப்பொருளின் தரம் மற்றும் பதிவேடுகள் ஆகியவற்றை முழுமையாக ஆய்வு செய்தது.

அப்போது கண்டறியப்பட்ட குறைபாடுகள் அனைத்தையும், நிவர்த்தி செய்ய சம்பந்தப்பட்ட நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. ஆய்வின்போது உணவு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட பல் வேறு வகையான மூலப்பொருட்களின் தரத்தினை உறுதி செய்வதற்காக, உணவு மாதிரி எடுத்து பகுப்பாய்வு கூடத்திற்குஅனுப்பப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளின் உணவு விடுதி, சமையலறை, சேமிப்புஅறை, மற்றும் உணவுப்பரிமாறும் இடம் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். சமையல்கூடம் மற்றும் உணவு உண் ணும் அறைக்கு அருகில் கழிப்பறை இருக்கக்கூடாது. சமையலுக்கு தரமான பொரு ட்களை மட்டுமே பயன்படுத்தவேண்டும். அனைத்து பாத்திரங்களும் சமைக்கும் பணி முடிந்தவுடன், சுடுநீரில் கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.
சமையல் செய்யும்பொழுது சமையலர் மற்றும் உதவியாளர்கள் அனைவரும் தலைகவசம், முக கவசம், கையுறை, மேலங்கி ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும்.
பள்ளி, கல்லூரிகளில் பயன்படுத்தப்படும் குடிநீரை 3 மாதத்துக்கு ஒருமுறை அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனைக்கூடத்தில் பரிசோதனை செய்து அதன் அறிக்கை மற்றும் அதற்குரிய பதிவேடுகள் பராமரிக்கப்படவேண்டும். விதிமுறைகளை கடைபிடிக்காத பள்ளி மற்றும் கல்லூரிகள் நிர்வாகத்தின்மீது உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த விதிமுறைகளை நாமக்கல் மாவட் டம் முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலுள்ள உணவுக்கூடங்கள் அனைத்தும் பின்பற்றவேண் டும். உணவு பாதுகா ப்பு துறை ஆய்வுசெய்து, நடவடிக் கை எடுத்து அதன் விபரத்தை தெரிவிக்கவேண் டும். இவ்வாறு கலெக்டர் தட்சிணாமூர்த்தி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment