வாழப்பாடியில் உணவு பாதுகாப்பு அலுவலர் நடவடிக்கை காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல்

வாழப்பாடி, ஜூன் 13:
வாழப்பாடியில் காலாவதியான உணவு பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடியில் உள்ள மளிகை கடை, பெட்டிக்கடை, பேக்கரி, ஓட்டல், தள்ளுவண்டிகளில் காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், மாவட்ட பாதுகாப்பு உணவு அலுவலர் அனுராதா தலைமையில் அதிகாரிகள் வாழப்பாடியில் உள்ள டீ கடை, பெட்டிக்கடை, பேக்கரி, ஹோட்டல்கள், பஸ்நிலைய கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் கெட்டுப்போன பன், கேக்குகள், தடை செய்யப்பட்ட பகையிலை பொருட்கள், காலாவதியான பிஸ்கெட்டுகள், டீத்தூள்கள், தண்ணீர் பாக்கெட்டுகள், 1000 குளிர்பானங்களை பறிமுதல் செய்து அழித்தனர். இதன் பின்னர் பாதுகாப்பு அலுவலர் டாக்டர் அனுராதா கூறுகையில், காலாவதியான உணவு பொருட்களை விற்பனை செய்தால், அவை பறிமுதல் செய்யப்பட்டு, கடைக்காரர்களுக்கு அபராத தொகை விதிக்கப்படும். மே லும், சட்டப்படி யான நடவ டிக் கை மேற்கொ ள்ள ப்ப டும் என் றார்.
ஊட்டி மார்க்கெட் பகுதி கடையில் கழிப்பிட நீரில் உணவு தயாரிப்பு?
ஊட்டி, ஜூன் 13:
ஊட்டி மார்க்கெட் பகுதி கடையில் கழிப்பிட நீரில் உணவு தயாரிக்கப்படுவதாக வந்த தகவலையடுத்து உணவு பாது காப்பு துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு நடத்தினர்.
ஊட்டிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இதுமட்டுமின்றி பல்வேறு பணிகளுக்காக சுற்று வட்டார பொதுமக்களும் நாள்தோறும் வருகின்றனர். அவர்கள் ஊட்டி நகரில் உள்ள ஓட்டல்கள், உணவகங்கள் போன்றவற்றில் உணவருந்துகின்றனர்.
இந்நிலையில் ஓட்டல், உணவகங்களில் சுகாதாரமான குடிநீர், உணவு வழங்க வேண்டும் என உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டுத்துறை அறிவுறுத்தி உள்ளது.
இந்நிலையில் ஊட்டி புளூமவுண்டன் பகுதியில் நகராட்சி மொத்த காய்கறி மார்க்கெட் வளாகத்தில் நகராட்சி கட்டண கழிப்பிடம் உள்ளது. இந்த கழிப்பிடத்தில் கழிப்பிட பயன்பாட்டிற்காக உள்ள தண் ணீரை, கேன் மூலம் கொண்டு சென்று சிறிய டீ கடைகள், உணவகங்களில் பயன்படுத்தப்படுவதை பொதுமக்கள் சிலர் பார்த்துள்ளனர்.
இதனை தொடர்ந்து அந்த கழிப்பிடத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள், உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டுத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற உணவு பாதுகாப்பு அதிகாரிகள், சம்பந்தப்பட்ட கழிப் பிட ஒப்பந்ததாரரிடம் விசா ரணை மேற்கொண்டனர்.
மேலும் கழிப்பிடத்தில் உள்ள அசுத்த நீரை உணவு பொருட்கள் சமைப்பதற்காக எடுத்து சென்ற கடைக்கு விசாரணை நடத்த சென்றனர்.
ஆனால் அந்த கடை பூட்டப்பட்டிருந்தது. இது தொடர்பாக உணவு பாதுகாப்பு அலுவலர்கள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அசுத்தமான நீரை ஓட்டல்கள், உணவகங்களில் பயன்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர். இதுகுறித்து உணவு தரக் கட்டுபாட்டு அலுவலர் டாக்டர் ரவி கூறுகையில்,
ஊட்டி புளூமவுண்டன் பகுதியில் உள்ள சில சிறிய உணவகங்கள், டீ கடைகள் அருகில் உள்ள நகராட்சி கழிப்பிடத்தில் இருந்து அசுத்தமான நீரை கேன் மூலம் எடுத்து சென்று உணவு தயாரிக்க பயன்படுத்துவதாக புகார் வந்தது. புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அசுத்த நீரை பயன்படுத்திய கடை யும் பூட்டப்பட்டிருந்தது. தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். ஊட்டி நகரில் உள்ள ஓட்டல்கள், உணவகங்கள் பொதுமக்களுக்கு சுத்தமான சுகாதாரமான உணவு, தண்ணீர் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் சில டீ கடைகள், உணவகங்களில் அசுத்தமான நீரை பயன்படுத்துவது தொடர்கிறது. ஆய்வின் போது இது தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

No comments:

Post a Comment