கடைகளில் பதுக்கி விற்பனை செய்த ரூ.1லட்சம் புகையிலை பொருள் அழிப்பு

திருப்பூர், ஜூன் 27:
மாநகர் முழுவதும் ரூ.1லட்சம் மதிப்பில் குட்கா மற்றும் போதை புகையிலை பொருட்களை திருப்பூர் உணவு கலப்பட தடுப்பு பிரிவு மற்றும் பாதுகாப்பு துறையினர் கண்டுபிடித்து அழித்தனர்.
மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் உணவு கலப்பட தடுப்பு பிரிவு மற்றும் பாதுகாப்பு துறையினர் மாநகர் முழுவதும் வணிக நிறுவனங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். பழைய பஸ்நிலைய பின்புறம், தினசரி மார்க்கெட், கே.எஸ்.சிபள்ளி சாலை, அரிசி கடை வீதி, தாராபுரம் ரோடு போன்ற இடங்களில் மெத்த விற்பனையளர் கடையில் சோதனை செய்தனர். மாவட்ட நியமன அலுவலர் விஜய், உணவு கலப்பட தடுப்பு பிரிவு மற்றும் பாதுகாப்பு துறையினர் முருகேஷ், தங்கவேல், காமராஜ், ரகுநாதன், பழனிச்சாமி, கிருஷ்ணசாமி, ஆகியோர் சோதனையில் ஈடுபட்டனர்.
இதில், தடை செய்யப்பட்ட குட்கா, மற்றும் போதை தரக்கூடிய புகையிலைகளை கடைகளில் வியாபாரிகள் மறைத்து வைத்து விற்பனை செய்து தெரிந்தது. அவற்றை, உணவு கலப்பட தடுப்பு பிரிவு மற்றும் பாதுகாப்பு துறையினர் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட சுமார் ரூ.1லட்சம் போதை பொருட்களை அழித்தனர். மேலும் காலாவதியான உணவு பொருட்களையும் அப்புறப்படுத்தும் படு அனைத்து வணிக நிறுவனங்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.

No comments:

Post a Comment