பெரம்பலுர் அருகே ரூ.1 லட்சம் மதிப்பு கலப்பட டீத்துள் பறிமுதல்

பாடாலூர், ஜூன்12:
பெரம்பலுர் அருகே 200 கிலோ சாயம் கலந்த தேயி லைத் தூளை உணவு பாதுகாப்புத் துறையினர் பறி முதல் செய்தனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் உள்ள டீக்கடைகளில் உணவு பாதுகாப்புத் துறையினர் ஆய்வு செய் னர். அப்போது கடைக ளில் சாயம் கலந்த தேயி லைத் தூள் பயன்படுத்தப்படுவது கண்டறியப்பட் டது. இது குறித்து டீக் கடைக்காரர்களிடம் விசா ரணை நடத்தியபோது பாடாலூரில் இருந்து சிலர் கொண்டு வந்து விற் பனை செய்து வருவது தெரிய வந்தது.இதையடுத்து நேற்று உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவ லர் புஷ் பராஜ் தலைமை யில் அலுவலர்கள் ரவி, அழகுவேல், அன்பழகன், சின்னமுத்து ஆகியோர் கொண்ட குழு வினர் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது பாடா லூர் பகு தியில் உள்ள இரண்டு வீடு களில் இருந்து 200 கிலோ சாயம் கலந்த தேயிலைத் தூள் பறிமுதல் செய்யப்பட்டது. இவற் றின் மதிப்பு ரூ.1 லட் சம். இந்த தேயிலைத்தூளின் மாதிரி உண வுப் பகுப்பாய்வு பரிசோதனை க்கு அனுப்பப்பட் டது.
பரிசோதனை அறி க்கை வந்த பன் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்ப டும் என உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவ லர் புஷ்பராஜ் தெரிவித் தார்.

No comments:

Post a Comment