மாவட்டம் முழுவதும் அதிரடி புகையிலை பொருட்கள் விற்பனை 178 கடைகள் மீது வழக்கு பதிவு

சேலம் மாவட்டத்தில் தடையை மீறி புகை யிலை பொருட்களை விற்ற 175 கடைகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் புகையிலை, குட்கா உள்ளிட்ட பொருட் கள் விற்பனைக்கு அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளின் அருகில் உள்ள கடைகளில் தடையை மீறி புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. ஆனால் இதனை போலீசார் கண்டுகொள்ளாமல் இருந்து வந்தனர்.
இந்நிலையில் கடைகளில் ஆய்வு செய்ய போலீசாருக்கு எஸ்பி சக்திவேல் அதிரடியாக உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் சேலம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளின் அருகில் உள்ள கடைகளில் போலீசார் ஒரே நேரத்தில் நேற்று அதிரடியாக சோதனை நடத்தினர்.
சோதனையின் போது தடையை மீறி புகை யிலை பொருட்களை விற் பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டு 175 கடைகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டன.
சேலத்தில் 31 கடைகளிலும், சங்ககிரியில் 24 கடைகளிலும், ஆத்தூரில் 34 கடைகளிலும், மேட்டூரில் 29 கடைகளிலும், வாழப்பாடியில் 22 கடைகளிலும், ஓமலூரில் 32 கடைகளிலும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது கண்டறியப்பட்டது. இந்த கடை உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப் பட்டது. தொடர்ந்து போலீசார் கடை களில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

                                           

No comments:

Post a Comment