தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை கண்டு கொள்ளாமல் அதிகாரிகள் அலட்சியம்

தேனி.:
தேனியில், தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் போதை பாக்கு விற்பனை தாராளமாக நடக்கிறது. அரசின் உத்தரவை அமல்படுத்த வேண்டிய அதிகாரிகள், கண்டு கொள்ளாமல் அலட்சியம் காட்டுகின்றனர். தமிழகத்தில், புற்று நோய் அதிகரிப்பை தவிர்க்கும் பொருட்டு, புகையிலை பொருட்கள், போதை பாக்குகள் விற்பனையை, தமிழக அரசு தடை செய்துள்ளது.தொழிலாளர்கள் புகையிலை, போதை பாக்குகளை உட்கொண்டு ஆரோக்கியத்தையும், பொருளாதாரத்தையும் இழந்து வந்தனர். அரசின் தடையால், ஓரளவு பயன்பாடு குறைந்தது. ஆரம்பத்தில், இந்த தடையை அமல்படுத்த, உணவு பாதுகாப்பு நியமன அலுவலர், நகாராட்சி, உள்ளாட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, திருட்டுத் தனமாக விற்கப்படும் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடை செய்தனர். அதன்பிறகு, கடந்த சில மாதங்களுக்கு முன், அதே லேபிளில், வாசனை பாக்கு, தனி பாக்கெட்டில் போதை பாக்கும் அடைத்து, இரண்டையும் சேர்த்து வாடிக்கையாளர்களுக்கு மட்டும், மறைத்து விற்பனை செய்து வந்தனர்.தற்போது, தேனி உள்ளிட்ட நகர் பகுதிகளிலும், மலை கிராமங்கள்,குக் கிராமங்களில் தடைசெய்யப்பட்ட போதை பாக்கு, புகையிலை பொருட்கள் வெளிப்படையாக அப்பட்டமாக விற்பனை செய்யப்படுகிறது. அரசின் தடை உத்தரவை, தாலூக வாரியாக உள்ள அதிகாரிகளும், உணவு பாதுகாப்பு நியமன அலுவலரும் கண்டுகொள்வதில்லை. இதனால், விற்பனை அமோகமாக நடக்கிறது . இதனால்,புகையிலை பொருட்கள் உட்கொள்பவர்களின் சதவீதம் குறையாது. கேன்சர் உள்ளிட்ட நோய்களும் குறையாது. எனவே, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடைசெய்ய, மாவட்ட நிர்வாகம் உத்தரவிடவேண்டும்.

No comments:

Post a Comment