உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தை திரும்பபெற வேண்டும் சென்னையில் வணிகர் சங்கங்கள் பேரவை ஆர்ப்பாட்டம்

சென்னை, பிப்.5-மத்திய அரசின் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.தர நிர்ணய சட்டம்மத்திய அரசின் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தை அனுமதிக்கக் கூடாது என்றும், அதை திரும்பப் பெற வேண்டும் என்றும் வணிகர் சங்கங்களின் சார்பில் தொடர்ந்து கோரிக்கை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் தர நிர்ணய சட்டத்தின்படி பதிவு உரிமம் செய்ய நேற்று (செவ்வாய்க்கிழமை) கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. இதனை கண்டித்தும், உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தும் தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரவை சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வணிகர் சங்க பேரவை தலைவர் த.வெள்ளையன் தலைமை தாங்கினார். முன்னதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தின் போது த.வெள்ளையன் கூறியதாவது:-உள்நோக்கம்மத்திய அரசாங்கத்தால் புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் உணவுப் பாதுகாப்பு தர நிர்ணயச்சட்டம் உள்நாட்டு வணிகர்களை அழிக்கும் கருப்புச் சட்டமாகும். ஏற்கனவே உணவு பொருட்களின் தரத்தை நிர்ணயம் செய்ய 1959-ம் ஆண்டிலிருந்து இன்று வரை விரிவான சட்டம் நடைமுறையில் இருக்கும் நிலையில், இந்த புது சட்டம் தேவையில்லாதது. உள்நாட்டு வணிகத்தை அழித்து அந்நியருக்கு உதவவேண்டும் என்கிற உள்நோக்கத்துடன் மத்திய அரசு இந்த திட்டத்தை கொண்டு வந்திருக்கிறது. தவிர்க்க வேண்டும்இச்சட்டத்தின் கீழ் உரிமம் பதிவு செய்து கொள்ள பிப்ரவரி 4-ந்தேதி(நேற்று) கடைசி தேதியாகமத்திய அரசு அறிவித்தது. இது வணிகர்களை கட்டுப்படுத்தாது. எனவே வணிகர்கள் யாரும் இச்சட்டத்திற்கு கட்டுப்படவும் மாட்டோம், அபராதமும் கட்ட மாட்டோம். சிறைதண்டனை என்றாலும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வோம். மேலும் இச்சட்டத்தை ராஜஸ்தான், புதுடெல்லி, பீகார், உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்கள் தங்களுடைய மாநிலங்களில் நடைமுறைப்படுத்தாமல் தவிர்த்து விட்டன. இதேபோல் தமிழக அரசும் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் தவிர்க்க வேண்டும். பாராளுமன்ற தேர்தலில்...இச்சட்டத்தை உடனடியாக மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். இல்லையெனில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் இதற்கான பதிலை வணிகர் சங்க பேரவை வாயிலாக தெரிவிப்போம். இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பேரவையின் மாவட்ட செயலாளர்கள் எஸ்.சவுந்தரராஜன், வியாசை எம்.மணி, ப.தேவராஜ், பொருளாளர் எஸ்.ஆர்.வி.ரத்தினம், தலைமை நிர்வாக செயலாளர் சி.எல்.செல்வம் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.


No comments:

Post a Comment