மத்திய அரசு உணவுப்பாதுகாப்பு தரநிர்ணயச் சட்டம் காலநீட்டிப்பு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தகவல்

சென்னை, பிப்.5-உணவுப்பாதுகாப்பு மற்றும் தரநிர்ணயச் சட்டத்தை, மத்திய அரசு காலநீட்டிப்பு செய்துள்ளது என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தெரிவித்துள்ளது.இதுகுறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத்தலைவர் ஏ.எம்.விக்ரம ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-உணவுப்பாதுகாப்பு தரநிர்ணயச்சட்டம்உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணயச் சட்டம் 2006 விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் 2011-ன் கீழ் பதிவு மற்றும் உரிமம் எடுக்க, கால அவகாசம் 2014- பிப்ரவரி 4-ந்தேதி வரை அளிக்கப்பட்டிருந்தது. இச்சட்டத்தில் உள்ள விதிமுறைகளின்படி உணவுத் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் யாரும் செயல்பட முடியாது. இந்திய உணவுத் தொழில்கள் ஒட்டுமொத்தமாக அழிக்கப்படும்.நாடு முழுவதும் உணவுத் தொழிலில் ஈடுபட்டுள்ள 6 கோடி வணிகர்கள் முழுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே, இச்சட்டத்தில் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை முழுமையாக மாற்றியமைக்க வேண்டும். மேலும், தற்போது காலநீட்டிப்பு பிப்ரவரி 4-ந்தேதி என்பதை மேலும் 1 ஆண்டு நீட்டிப்பு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மனுவினை மத்திய சுகாதாரத்துறை மந்திரி குலாம்நபி ஆசாத்திடம் 2 முறை டெல்லியிலும், ஒரு முறை சென்னையிலும் நேரில் சந்தித்து அளிக்கப்பட்டது.காலநீட்டிப்புநான் (விக்கிரமராஜா), மாநிலப் பொதுச்செயலாளர் கே.மோகன், மாநிலப் பொருளாளர் வி.கோவிந்தராஜுலு மற்றும் அகில இந்திய வணிகர்கள் சம்மேளன தேசிய பொதுச்செயலாளர் பிரவீன் கண்டேல்வால் மற்றும் நிர்வாகிகள் இதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்தோம். எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் உணவுப்பாதுகாப்பு அதிகாரிகள் வணிகர்களை துன்புறுத்தி வந்தனர்.இந்நிலையில் மாநில பொதுச்செயலாளர் கே.மோகன், திருச்சி மாவட்ட தலைவர் ஆர்.எம்.ரவிசங்கர் மற்றும் நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை டெல்லியில் சந்தித்து பேசினர். தற்போது 2014-ம் ஆண்டு பிப்ரவரி 4-ந்தேதி என்பது காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.நன்றி அறிவிப்புஎனவே தமிழகத்திலுள்ள வணிகர்கள் உணவுப்பாதுகாப்பு அதிகாரிகளின் கெடுபிடிகளுக்கு பயப்படத் தேவையில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இந்திய வணிகர்களின் கோரிக்கையை ஏற்று காலநீட்டிப்புக்கு உத்தரவிட்ட மத்திய மந்திரி குலாம்நபி ஆசாத்துக்கு, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பிலும், அகில இந்திய வணிகர் சம்மேளனம் சார்பிலும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

No comments:

Post a Comment