உணவு பொருள் சோதனையில் 3 பேருக்கு அபராதம் புதுக்கோட்டை கோர்ட்டு தீர்ப்பு-தினத்தந்தி செய்தி

புதுக்கோட்டை,
புதுக்கோட்டை நகராட்சியில் உணவு பாதுகாப்பு அலுவலராக பணிபுரிபவர் மகாமுனி. முன்பு இந்த நகராட்சியில் இவர் உணவு ஆய்வாளராக பணியாற்றியபோது கடந்த 28.5.2010–ந் தேதியன்று புதுக்கோட்டை வடக்கு ராஜவீதியில் உள்ள ஒரு மளிகை கடையில் சோதனை நடத்தினார். அப்போது அங்கு இருந்த இடியாப்பம் மாவு உணவு மாதிரியை எடுத்து, பரிசோதனைக்காக சென்னை கிண்டிக்கு அனுப்பி வைத்தார். இதில் அந்த உணவு பொருளில் தப்பு குறியிடப்பட்டது என்று சான்று அளிக்கப்பட்டது. இது குறித்து அனுமதி பெறப்பட்டு, புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த குற்றவியல் நீதித்துறை நடுவர் புஷ்பராணி நேற்று தீர்ப்பு கூறினார். அதில் மேற்படி உணவு பொருள் பாக்கெட்டின் லேபிளில் உணவு பொருளில் உள்ள சேர்மானம், பேட்ச் எண், சைவ குறியீடு ஆகிய விபரங்களின்றி உணவு பொருளை விற்பனை செய்த மற்றும் தயாரித்த ஷேக் ஆப்துல்காதர், ஷாஜஹான், நரசிம்மன் ஆகியோருக்கு ரூ.3 ஆயிரம் அபராதமும், நீதிமன்றம் கலையும் வரை தண்டனையும் விதித்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு குற்றவியல் வழக்கறிஞர் சிவசங்கரன் ஆஜரானார்.

No comments:

Post a Comment